செவ்வாய், 24 மே, 2016

ஒதிமலை அரசை நம்பெருமானை!

ஒதிமலை அரசை நம்பெருமானை!
தெளிவின் திருவை! அன்பின் ஊற்றை!
தமிழின் மூலமுதல்வனை! தொன்மையின் சிறப்பை!
தொழுதேற்றினோம் சென்னையில் சேர்ந்து!
https://www.facebook.com/omrasu/posts/1014266248651005?notif_t=like&notif_id=1464151765566467





ஞாயிறு, 18 அக்டோபர், 2015

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (உய) Othimalai Devine Secrets and its Devine Journey (20) கீற்று:2 "நிலையில்லா நிலை"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (உய)
Othimalai Devine Secrets and its Devine Journey (20)
கீற்று:2 "நிலையில்லா நிலை"
அருளாளர் வள்ளலார் நாளான இன்று இப்பயணத்தை நன்றிகடனாக வெளியிடுவதில் மகிழ்வோமாக!
நாம் நாமாக அமைத்துக்கொண்ட பாதையை பார்த்தோம். இப்படி நன்மை தீமை நல்லது கெட்டது, இழப்பு ஈட்டம் என்று எல்லாவற்றையும் இயல்பாகவே எடுத்துகொண்டுவிட்டோம். ஒரு இளைஞன் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது ஓர் புலி துரத்தியது. அஞ்சி ஓடி கிணறொன்றில் குதுதித்துவிட்டான். நல்ல வேலை கீழே விழாமல் இவருக்காகவே வளர்ந்திருந்த ஒரு செடியை பிடித்துகொண்டு தொங்கினான். கீழே ஆழமாக இருந்தது பாழும் கிணறு. கீழே கருநாகம் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது மேலே சினம் கொண்ட புலி மேலே எப்போது வருவான் என்று எட்டிப்பார்துக்கொண்டிருந்தது. கர கர என்ற ஒலியை கேட்டு பிடித்துக்கொண்டிருந்த செடியை பார்த்தால் அதன் வேரை ஒரு எலி கடித்துகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் அந்த செடி விழும் நிலையில் இருந்தது. இவற்றுக்கெல்லாம் மேல் கிணறருகேஇருந்த ஒரு மரத்தின் கிளை கிணற்றின் மேல் தெரிந்தது அந்த கிளையில் ஒரு தேன்கூடு இருக்க அதிலிருந்து அன்பொழுக கசிந்துவந்த தேன் கிணற்றில் பாதுகாப்பாக தொங்கிக்கொண்டிருந்த இளைஞன் மீது விழுந்தது. அந்த இளைஞனும் மிகவும் சுவைத்து அருந்திகொண்டிருந்தான்.
நிலையில்லாத ஒரு நிலையில் வாழ்க்கையை அவனைப்போல் நாம் ஏதோ ஒரு இனிமைகருதி பலவிதமான துயரங்களை ஏற்றுக்கொண்டு வாழ்வதை விட்டுவிட்டு உண்மையான மற்றும் நிலையான மகிழ்வினை அடையும் வழியை ஆராய்ந்து செயல்படுவோம்.
ஆறாம் அறிவை ஆண்டவன் அதற்காகவே நமக்கு கொடுத்தவரமாகும். இனம் இனத்துடன் சேரும் என்பது நமக்கு புரியும். நீருடன் நீர் சேரும், காற்றுடன் காற்று சேரும், ஒளியுடன் ஒளி சேரும், நெருப்புடன் நெருப்பு சேரலாம். இந்த சீவ ஆன்(த்)மாவாகிய நாம் அந்த பரமாத்மாவுடன் சேரவேண்டும் அல்லவா? அந்த பரம்பொருள் எப்படிப்பட்டது அன்பு மயமானது அன்பே சிவம். அன்பே சிவம். அந்த அன்பே சிவம் என்றால் நாம் நம்மை எப்படி தயார் செய்து கொள்ளவேண்டும், நாமும் அன்பு மயமாக ஆகவேண்டும் அல்லது மாறவேண்டும் அல்லவா. பெரும்பாலும் நாம் இப்பொழுதும் பிறந்தவுடன் விலங்களைப்போல் நான்கு கால்களால் தான் நடக்கிறோம், தவழ்கிறோம். பிறகு படிப்படியாக இரண்டு கால்களால் நடக்க துவங்குகிறோம். இதைப்போலவே விலங்குகலிலிருந்து மனிதனாக மாறும் நிலையில் விலங்கின் குண நிலைகள் மிகவும் அதிகமாகவே பொருந்தி இருந்ததால் நாம் கற்கால மனிதர்களாகவே இருந்தோம். பிறகு படிப்படியாக அதாவது ஒவ்வொருபிறவியாக பற்பல பிறவிகள் பயணித்து இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோம் என்று அவரவர்களுக்கு மிகவும் சிறப்பாகவே தெரியும். விலங்கின் எண்ணங்களும், பழக்க வழக்கங்களும் அவ்வப்பொழுது தலைகாட்டாமல் நாம் பழகியே ஆக வேண்டும்.
ஒருமுறை துறவி "தோபா சுவாமிகள்" திருவொற்றியூரில் ஓர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருப்பது வழக்கம். அப்போது சாலையில் செல்பவர்கள் ஒவ்வொருவரையும் ..மாடு போகிறது, ஆடு போகிறது, யாணை போகிறது, ஒட்டகம் போகிறது என்று விலங்குகளின் பெயரை சொல்லுவார். வள்ளல் இராமலிங்க அடிகள் சென்றபோது மனிதன் போகிறார் என்றார் என்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும் அன்றோ! அருளாளர் தொபாசுவாமிகள் வரலாரில்!.
நாம் முழு மனிதனாக உருவாக மேலும் பயிலுவோம் ... பயணம் தொடரும் ..
Santhi Anbe SivamNerkunam Radhakrishnan Venkatesan மற்றும்வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
கருத்துக்கள்
Santhi Anbe Sivam Adputhamane karuthu.hunggal payanam thodaradthum.om sivaye namahe.
Nagarajan Krishnamurthy மிக்க நன்றி சிவா,
தங்கள் கறுத்து மிகவும் ஊக்கமாக உள்ளது....
நன்றி...............அண்ணாமலை

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ ) Othimalai Devine Secrets and its Devine Journey (19) கீற்று:2 "பாதை" ..... தொடர்ச்சி ..

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ )
Othimalai Devine Secrets and its Devine Journey (19)
கீற்று:2 "பாதை" ..... தொடர்ச்சி ..
அந்த மணமகன் திருமண ஆரவாரத்தில் துறவி பட்டினத்தார் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை அருகிலிருக்கும் இளம்பெண்ணிடம் தான் இருந்தது. துறவி விடவேயில்லை திரும்ப திரும்ப இப்பொழுதும் தப்பிக்கலாம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். திருமண நிகழ்வில் திருமாங்கல்யம் கட்டியவுடன் அகப்பட்டுக்கொண்டான் அகப்பட்டுக்கொண்டான் என்று சொல்லிக்கொண்டே வெளியேறிவிட்டார் என்றொரு செவி வழி செய்தி. இது இப்படியே இருக்கட்டும், நாம் மீண்டும் வகுத்துக்கொண்ட பாதையில் திருமணம் ஆகாத ஒரு ஆண் அல்லது பெண் நிலையில் சமுகத்தில் இயல்பான மதிப்பு அளிப்பதில்லை,மற்றவர்களைப்போன்று பார்பதுமில்லை. அதிலும் திருமணம் ஆகாத ஒரு பெண் என்றால் மிகிவும் கொடுமை, பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் மிக மிக கொடுமை. அவர்கள் பல நிலைகளில் ஒதுக்கியே வைக்கபடுகிறார்கள் என்பது உண்மையே. திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்துவிட்டால் தம்பதியர்கள் பிழைத்தார்கள், இல்லையென்றால் மனைவி மீது தவறா, கணவன் மீது தவறா என்று குறித்து பேசுவார்கள். பெண் சற்று வசதி வாய்ப்புகள் இருந்தால் தப்பித்துகொள்வார். இல்லையென்றால் செய்தித்தாள்களில் வருமாறு ஆகிவிடும். பிறகு முதுமை இதைப்பற்றி கூறத்தேவையே இல்லை. மிகவும் அதிகமாத முதியோர் இல்லங்கள் உலகெங்கும் தனியார்களாலும், அரசுகளாலும் பல்கி பெருகியுள்ளமை அவர்களின் அவல நிலை பற்றி உணரலாம்.
...இவைகலிலிருந்து விடுபடும் பாதையை தேடி பயணிக்க ..பயணம் தொடரும் ...
Vijayalakshmi Ravichandranமற்றும் Vetri Vel ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ ) Othimalai Devine Secrets and its Devine Journey (19) கீற்று:2 "பாதை"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰௯ )
Othimalai Devine Secrets and its Devine Journey (19)
கீற்று:2 "பாதை"
மெய்யன்பர்களே, இப்பொழுதெல்லாம் இணையத்தில் வராத செய்திகளோ, பாடல்களோ இல்லை எனலாம். நமக்கு எவை எவையெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தும் நொடியில் கிடைத்துவிடுகிறது, அது உண்மையோ பொய்யோ என்பது வேறு !. அறிய பெரிய கருத்துக்கள், சித்த பெருமக்களின் நூல்கள், தேவார, திருவாசக அன்பொழுகும் அருள்நிறைந்த பாடல்களாக மந்திரங்களாக அனைத்தும் கிடைகிறது. இவை அனைத்தும் தனி மனிதர்களின் சிந்தனைகளைவிட, வேறுஒரு புத்தகத்திலிருந்தோ அல்லது பதிவுகளிலிருந்தோ எடுத்து கொடுக்கப்படுகிறது. அப்போதெல்லாம் ஒரு கருத்தையோ, காவியத்தையோ வெளி கொண்டுவர வேண்டுமானால் மிகவும் கடினம். கவியரசர் கம்பநாட்டாழ்வார், தமது இராமாயணத்தை வெளிக்கொணர மிகவும் வருத்தப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். இத்தனைக்கும் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பெருமையுள்ள அவருக்கே அந்த நிலை.
தமிழ் தெய்வம் அடியெடுத்து கொடுத்து எழுதிய கந்தபுராணம் வெளிக்கொணர இறைவனே புலவராக வந்து அருள வேண்டியிருந்தது. பழைய காலங்களில் அரிய நூல்கள் கிடைப்பதரிது. இப்பொழுது அரிய நூல்களும் சிறந்த கருத்துக்களும் எளிதாக கிடைக்கிறது. நாம் பல நூல்களையும் கருத்துகளையும் "பொழுது போக்காக" பயன்படுத்தி கொள்கிறோம்.
உண்மையாக பார்த்தால், மிகவும் தேவையான ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்தப் பாடல்கள் அனைத்தும் பொழுது போக்கிற்காகவும், பொழுது போக்கிற்காகவே உள்ள நூல்கள் அவசியமாகவும் ஆக்கிக்கொண்டு விட்டோம் அதாவது அற்பமானதை அதிசயமாகவும். அதிசயமானதை, சிறப்புவாய்ந்ததை அற்பமாகவும் ஏற்றுக்கொண்டதை போல. நாம் ஏன் இதை பேசுகிறோம் என்றால் இத்தகைய சிறந்த கருத்துக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் கிடைத்தும் நமக்கு அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாத நிலைக்கு காரணம் "கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது படித்த படிப்போடு காணாமல் போய்விட்டது. மகிழ்ச்சி மற்றும் அமைதி என்பது அய்யன் வாரியார் அருளியது போல் கடையில் கிடைப்பது அல்ல. குளிர் நீங்க வேண்டுமாயின் வெப்பம் வேண்டும், இருள் வேண்டுமானால் வெளிச்சம் (ஒளி) வேண்டும். துன்பம் நீங்க இறைவனின் அருள் வேண்டும். "இன்பமே என்னாலும் துன்பமில்லை" என்று அப்பர் பெருமான் கூறியிருப்பார். சற்று இப்பொழுது பயணத்திற்கு வருவோம்.
நமக்கு ஆறு அறிவு அதாவது மனிதர்களுக்கு ஆறறிவு என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் உண்மையிலேயே, அந்த ஆறாம் அறிவை வைத்து ஓர் அறிவு உயிர் முதல் ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள கோடிக்கணக்கான உயிர்கள் செய்யாதது எதை நம் சாதித்துள்ளோம், சற்றே சிந்திக்க வேண்டும் அல்லவா !
இங்கு யாரையும் குறைவாகவும் இழிவு படுத்தும் நோக்கத்துடனும் எழுதவில்லை. அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவும், அனைத்து உயிர்களும் தனக்கென குடில் அல்லது வீடு அமைத்துக்கொண்டு தம் இனத்தை பெருக்கிக்கொண்டு வாழ்கின்றன. பார்க்கப்போனால் நம்மைவிட அழகான வீடுகள் கட்டிக்கொள்கின்றன. பஞ்சுமெத்தை கூடிய படுக்கை அறை தம் குஞ்சுகளுக்கு, தமெக்கென மாடியறை, காற்றிலும், மழையிலும் காப்பாற்றிகொள்ளும் வகையில் தமக்கு தாமே பிறர் உதவியின்றி அமைத்துகொள்வது சிறப்பன்றோ. குறிப்பாக தூக்கணாங் குருவியின் கூட்டைப்பாருங்கள். பல உயிரிகள் நீர் இருக்கும் இடங்களுக்கு முன் கூட்டியே இடம்மாறி சென்றுவிடுகிறது, இயற்கை சீற்றங்களின் ஏற்றத்தாழ்வுகளை முன்கூட்டியே உணர்ந்து பாதுகாப்பாக செயல்புரிவது இங்கு நோக்கத்தக்கது. திருடர்களை பிடிக்க நாய்களின் (மோப்பதிற்கு) உதவி தேவைப்படுகிறது. நாம் கற்கால மனிதர்களைப்போல் இல்லாமல், ஓரளவு பகுத்துப்பார்த்து வாழ்கின்றோம். அவ்வளவுதான்.
நமது முன்னோர்கள் சாதிக்காதது எதை நாம் சாதித்துவிட்டோம். நாம் நமக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொண்டு வாழ்கிறோம். குழந்தைப்பருவத்தில் விளையாடி பிறகு முடிந்தவரை படித்து அல்லது பட்டம் பெற்று பொருளீட்டி, திருமணம் கொண்டு குழந்தைகளைப்பெற்று பிறகு அவர்களை எதிர்பார்த்தோ அல்லது சேர்த்துவைத்த சொத்துக்களை கொண்டோ முதுமைக் காலத்தில் அவரவர் விருப்பபடி இந்த உடல் தன் பயணத்தை முடித்துக்கொள்கிறது.
இதில் எந்த ஒரு மாறுபாட்டையும் நாமும், நம்மை சார்ந்த இனக்கூட்டங்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்க விரும்புவதும் இல்லை. கட்டுப்பாடுகள் முன்னேற்றத்திற்கு மிகவும் தேவை, ஆனால் அதுவே இரும்பு விலங்காக மாறிவிடக்கூடாது. குறிப்பாக நம் குழந்தை மற்ற குழந்தைகளைப்போல் விளையாடவோ அல்லது பிற செயல்பாடுகளில் சிறப்பாக இல்லையென்றால் உடனே வைத்தியரிடமோ, கோள்களை ஆராய்பவரிடமோ சென்று வருந்துகிறோம், இயல்பான நிலைக்கு வரும் வரை பாடுபடுகிறோம். பள்ளி துவங்கி கல்லூரி வரை வரும் ஏற்றத்தாழ்வு நிலைகள் ஈடு கொடுத்து வாழ்க்கை பயணத்தில் திறம்பட பயணிக்க உதவுகிறோம். இதற்காக நாம் படும் பாடுகள் எழத முடியாதவை.
இதன் பிறகு பணி நிலை, அதைதொடர்ந்து ஓரளவு பொருளீட்ட துவங்கியவுடன் திருமணம். திருமணம் நாம் வேண்டியோ வேண்டாமலோ, பெரு முயற்சி நிகழ்ந்து திருமணம் நிகழ்ந்துவிடுகிறது. பிறகு அவ்வளவுதான் கிரகணம் பிடித்து விட்டாலும் வாழ்க்கை கிரகணம் விடாது பற்றிகொள்ளும்! அளவுக்கு மாறிவிடுகிறது வாழ்க்கை. ஒரு சுவையான செய்தி நாம் அறிந்ததே ..பத்தினது அடிகளார் திருமணம் நடக்கும் ஒரு வீட்டில் வாயிற் பந்தலில் அமர்ந்திருந்தார் மண மகன் மண மேடை வந்ததும் அவனருகில் நின்றுகொண்டு காதருகில் "இப்பவும் தப்பிக்கலாம் " என்று கூறினார்.. .....பயணம் தொடரும்
Nerkunam Radhakrishnan VenkatesanNagarajan Krishnamurthy,Vetri Vel உடன் உங்களதும் விருப்புக்குரியது.

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰அ ) Othimalai Devine Secrets and its Devine Journey (18) கீற்று:1 "நம்மால் முடியும்"

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும் (௰அ )
Othimalai Devine Secrets and its Devine Journey (18)
கீற்று:1 "நம்மால் முடியும்"
மெய்யன்பர்களே, தீர்த்தமலையுடன் முதல் பகுதி (காண்டம்) முடிவடைந்து ஓதிமலை பயணம் துவங்கவுள்ளோம். இந்த இரண்டாம் பகுதியில் (காண்டத்தில்), நம் உண்மை நிலையையும், எதை உணர்ந்தால், நமக்கு முழுமை (பூரணத்துவம்) உண்டாகுமோ, எதை அடைந்தால், அதற்குமேல் ஒன்றை அடைய விருப்பம் இருக்காதோ,
எதை தெரிந்துகொண்டால், வேறு எதையும் தெரிந்து கொள்ள விருப்பம் இருக்காதோ ,
எந்த நிலை வந்தால், அதற்கு மேல் ஒன்றும் செய்யவேண்டிய எண்ணம் வராதோ,
அந்த நிலைக்குவர, அதை தெரிந்துகொள்ள, அதை உணர, அதை அடைய இவ்வருட்பயனத்தில் தொடர்வோம்.
இயல்பாக நமக்கு ஏற்படும் கேள்விகள் குடும்பத்துடன் இருக்கும் நம்மாள் முடியுமா?
மனைவி மக்களுடன் வாழும் நாம் எப்படி இந்த முயற்சியில் இறங்குவது?
துறவியாகி காடு மலைகளுக்கு செல்லவேண்டுமா?
யாரோ ஒரு குருவை தேடிப் போகவேண்டுமோ?
என்னென்ன பயிற்சிகள் செய்யவேண்டும் எப்படி செய்வது என்றெல்லாம் மனதில் எழும் !
நம்மால் முடியும், காடு மலைகளுக்கு துறவியாகி செல்லத்தேவையில்லை நல்ல உண்மை குரு தானே கிடைப்பார் என்றும், பயிற்சிகளை பற்றியும் தெளிவாக, படிப்படியாக பாப்போம்.
முனிவர்களும், சித்த பெருமக்களும் நம்மை போன்று மனைவி மக்களுடன் வாழ்ந்து கொண்டே, ஆராய்ந்து, கடுமையாக முயன்று அந்த பேரின்பத்தை தாமும் நுகர்ந்து, நமக்கும் வழிகாட்ட வில்லையா? மூத்தமுனி அகத்தியர் பெருமான் லோபா முத்திரை தேவியுடனும், ஐயன் காகபுசுண்டர் பகுளா அம்மையுடனும், ஐயன் அத்திரி மகான் அனுசுயா தேவியுடனும், ஐயன் வசிட்டர் போன்ற பல அருளாளர்கள் குடும்பத்துடன் இருந்து பயின்றவர்கள்.
மேலும் நாயன்மார்கள் அனைவரும் அப்படித்தானே! பிறகு நாம் மட்டும் ஏன் இந்த குடும்பத்தை நரகமாக கருதி அமைதியில்லாமல் வாழ வேண்டும்.
நம்மால் முடியும் என்ற முழு நம்பிக்கையுடன் ஓதிமலை பயணத்தை தொடர்வோம் தங்கள் ஒத்துழைப்புடன் அய்யனே!

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்) Othimalai Devine Secrets and its Devine Journey ஒரு பார்வை (கண்ணோட்டம் மெய்யன்பர்களின் அருள் பார்வைக்கு

ஓதிமலை பயணமும் ஓதிமலை கமுக்கமும் (இரகசியமும்)
Othimalai Devine Secrets and its Devine Journey
ஒரு பார்வை (கண்ணோட்டம்
மெய்யன்பர்களின் அருள் பார்வைக்கு
முதல் பகுதியில் இதுவரை நாம் கதை போன்று,
உயிர்நிலையாகிய (ஜீவாத்மா) நம் மூன்று நிலைகளை அதாவது பொது நிலை (சகலர்), அடங்கு நிலை (பிரளயாகலர்), அறிவியல் நிலை (விஞ்ஞானகலர்) என்று மூன்று நிலைகளையும் அதற்கு ஏற்றவாறு அந்நிலைக்கு ஏற்ப இறைவன் அந்த பரம்பொருள் வந்து
விறகில் தீயினர் போன்று பொது நிலைக்கும் (சகலர்),
பாலில் படு நெய் போல் அடங்கு நிலைக்கும் (பிரளயாகலர்),
மணிக்குள் ஒளிபோல் அறிவியல் நிலைக்கும் (விஞ்ஞானகலர்)
அருள்பாலிக்கிறார் என்று பார்த்தோம்.
இனி இரண்டாம் பகுதியில் உண்மைநிலை உணர நாம் எப்படியெல்லாம் இருக்கிறோம் என்று தெளிந்து கொண்டு மூன்றாம் பகுதியில் மாலும், நான்முகனும் தேடி தேடொணா தேவனை தம்முள்ளே தேடும் வழியையும், கமுக்கங்களையும் (இரகசியம்) உறவு கொள் நட்டு, உணர்வு கயிற்றால் உருக வாங்கி கடையும் வழிகளையும் விளக்கமாக பார்த்து கதி ஒன்றையும் காண்கின்றிலேன் என்ற நிலை மாறி உண்மை கதியை ஒதிமளையான் அருளால் பெற்று படியேருவோம் படிப்படியாக அவனை அடியவே!
****
Vetri Velமெய் பொருள் காண்பது அறிவுMohanraj Muruganandam மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
கருத்துக்கள்
ஓதியடிமை
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
இதுவரை ஒதிமலைhttps://www.facebook.com/groups/othimalaikamukkam/ பயணத்தில் இணையத்தவர்கள் விரும்பினால் இணைந்து கொள்ளவும். முதல் நிலை பதிவு முடிந்து அடுத்த ஞானநிலைப்பதிவு துவங்க உள்ளதால் உடனே இணையவும் அப்பொழுதுதான் உரிய பதில் விளக்கப்படும் - விருப்பம் அல்லது பதில் எழுதாத அன்பர்கள் நீக்கபடுவார்கள் என்பது வேண்டுகோள் அய்யனே